Our Re-located Shop Address:#No.129, Velachery Main Road, Kamarajapuram, Chennai-73 (Landmark: Near Kamarajapuram Bus Stand)

Watch my Latest Video in Cauvery News, Thank you for all your support on caring our future generation healthy with the bond of nature.

Watch my Latest Video in Puthiya Thalaimurai, Thank you for all your support it deserves to the people of nature.


A MURAL is any piece of artwork painted or applied directly on a wall, ceiling or other large permanent surface. A distinguishing characteristic of mural painting is that the architectural elements of the given space are harmoniously incorporated into the picture.


Watch my Video in Puthiya Thalaimurai, Thank you for all your support it deserves to this nature.

பண்டைய காலங்களில் வீடுகளில் மண் பானையில் குடிநீர் இருக்கும். மண் பானையில்தான் சமையல் நடக்கும்.

பண்டைய காலங்களில் வீடுகளில் மண் பானையில் குடிநீர் இருக்கும். மண் பானையில்தான் சமையல் நடக்கும். காலப்போக்கில் இவை கிராமப்புறங்களில் கூட காணாமல் போனது. ஆனாலும் இன்றளவும் கூட, மண் பானை சமையலை விரும்புபவர்களும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இதற்கு காரணம் இதில் சமைத்த உணவின் ருசியும், ஆரோக்கியமும் தான். வருடம் தோறும் வரும் பொங்கல் பண்டிகை, மக்களுடன் மண் பானை தொடர்பை ஏற்படுத்தி, பாரம்பரியத்தை காக்க செய்கிறது. தமிழரின் பாரம்பரிய சமையல் பாத்திரமாக விளங்கும் மண் பானையில் சமைப்பதால் கிடைக்கும் பயன்களும் அதிகம். மண்பானைகள் பல நூற்றாண்டுகளாக ஆரோக்கிய சமையலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் சமைக்கும் போது உணவின் மீது வெப்பம் சீராக, மெதுவாக பரவுகிறது. இது உணவை சரியான முறையில் சமைக்க உதவுகிறது. மேலும் மண்பானைகளில் உள்ள நுண்துளைகள் மூலம் நீராவி, காற்று உணவில் ஒரே சீராக ஊடுருவி உணவை சமைக்க உதவுகிறது.

இதனால் மண் பானைகளில் சமைக்கும் உணவு ஆவியில் வேக வைத்த உணவைப்போன்ற தன்மையை பெறுகிறது. இது உடல் நலனுக்கு உகந்தது. இதனால் உணவில் உள்ள சத்துகள் பாதுகாக்கப்பட்டு, எளிதில் செரிமானமாகும் தரமான உணவு கிடைக்கிறது. மேலும் மண் பானைகள் சமைக்கும் உணவில் உள்ள அமிலத்தன்மையை சமப்படுத்தும் தன்மை கொண்டவை. ஆனால், உலோக பாத்திரங்களோ, உப்பு, புளிப்பு சுவையுடைய உணவுகள் சமைக்கும் போது உணவுடன் வினைபுரியும் தன்மை கொண்டது. மேலும் மண்பானையில் சமைக்கும் போது, அதிக எண்ணெய் பயன்படுத்தவும் தேவையில்லை. இப்படி மண்பாண்டங்கள் குறித்து பல்வேறு சிறப்பம்சங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

மண்பாண்டங்கள்தான் சமைக்க மிகச் சிறந்தவை. எந்த வித பின்விளைவுகளும் அற்றது. மண்பானையில் சமைத்த உணவு பல மணி நேரம் கெடாமல் இருக்கும். நமக்கு இயற்கை ரெப்ரிஜிரேட்டரே மண்பானைகள்தான். அதில் செய்யப்படும் உணவு மிக சுவையானது,மண்பாத்திரங்களைப் பயன்படுத்தும் போது அவ்வப்போது கழுவி வெயிலில் காய வைத்து பயன்படுத்துவது ரொம்பவே முக்கியம்.

Also, please Contact 9962807914, 9841757916 for more details and Our Shop Located @ Mayan Arts and Potteries, Lenin Complex, Shop No.3, Bharathi School Street, Velachery Main Road, Selaiyur, Chennai - 73. (Behind Camproad Signal)

உன்னால் முடியும்: அழிந்த தொழிலை உயிர்ப்பிக்கும் கலை!

கால மாற்றத்தில் அழிந்து கொண்டிருக்கும் ஒரு பாரம்பரிய தொழிலை நவீனமாக மாற்றி அதில் வெற்றி கண்டுள்ளார் அரசு பாஸ்கர். ஆம்! மக்கள் பயன்பாட்டிலிருந்து வழக்கொழிந்த மண்பாண்ட தயாரிப்புகளுக்கு மறு வடிவம் கொடுத்து வருகிறார் இவர். சென்னை குரோம்பேட்டையில் உற்பத்தி மையத்தையும், தாம்பரத்தை அடுத்த சேலையூரில் விற்பனையகத்தையும் வைத்துள்ள இந்த தொழில் முனைவரது அனுபவம் இந்த வாரம் ``வணிகவீதி’’-யில் இடம் பெறுகிறது.

சென்னை கவின்கலைக் கல்லூரியில் செராமிக் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்று அது தொடர்பான தொழில்களில் ஐந்து ஆண்டுகள் ஈடுபட்டு வந்தேன். பெயிண்டிங் மற்றும் சுவர்களில் அலங்காரமாக தொங்கவிடப்படும் பல கலைவடிவங்களை தயாரித்துக் கொண்டிருந்தேன். வருமானம் குறைவாக இருந்தாலும், கலையின் மீது இருந்த ஈடுபாடு காரணமாக வேறு தொழில்களை நாடிச் செல்ல மனது வரவில்லை.

ஆனால் தொடர்ச்சியாக ஈடுபட முடியாத காரணத்தால் 2000 ஆண்டிலிருந்து அனிமேஷன் துறை சார்ந்த வேலைகளுக்குச் செல்லத் தொடங்கினேன். அங்கும் பெயிண்டிங் மற்றும் 3டி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சிகளை பல மாணவர்களுக்கு விளக்கும் வேலைதான். கூடவே கிடைக்கும் நேரங்களில் களிமண் வேலைப்பாடுகளில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தேன். பல நேரங்களில் மனது முழுக்க களிமண் குறித்த சிந்தனைகளே ஓடிக் கொண்டிருக்கும்.

களிமண்ணில் எந்த வகையில் சிற்பங் களையும், உருவங்களையும் செய்ய முடியும், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உரியதாக மாற்ற முடியும் என்கிற யோசனையாகவே இருக்கும். களிமண் தயாரிப்புகள் சார்ந்து வீட்டில் பல முயற்சிகளையும் மேற் கொண்டேன். கூடவே இது தொடர்பாக ஆலோசனைகளை வழங்க களிமண் சிற்ப கலைஞர் பாண்டிச்சேரி முனுசாமி அவர்களது தொடர்பிலும் இருந்தேன்.

ஒரு கட்டத்தில் அனிமேஷன் துறை வேலையை விட்டுவிட்டு முழு நேரமாக களிமண் தயாரிப்புகளில் இறங்கினேன். இதை வணிக ரீதியில் பயன்பாட்டுக்கான தாக மாற்ற எடுத்த பல முயற்சிகளினால் சமையல் பாத்திரம், தட்டு, இட்லி பானை என பல தேவைகளுக்கு தயாரிக்க முடிந்தது.

இதை கையாளுவதும், பயன்படுத்து வதும் சிரமம் என்கிற புரிதல் மக்க ளுக்கு இருப்பதால், பல வர்த்தகக் கண்காட்சிகளில் கலந்து கொண்டு மண் பாண்ட பாத்திரங்களை கையாளுவது குறித்து மக்களுக்கு விளக்குவேன். மேலும் எனது தயாரிப்புகள் வழக்கமான மண்பாண்டங்களைப் போல இல்லாமல் அழகான வகையில் வடிவமைப்பதால் மக்கள் ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர். பெரிய ஹோட்டல்களில் உணவுகளை பரிமாறுவதற்கு மண்பாண்டங்களை பயன் படுத்துவது அதிகரித்துள்ளதால் அவர்களும் வாங்கிச் செல்கின்றனர். தவிர தயிர், ஐஸ்கிரீம் குடுவைகளும் அதிக அளவில் விற்பனையாகிறது.

சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வும், இயற்கை உற்பத்திப் பொருட்கள் மீதான மக்களின் ஆர்வமும் இந்த பொருட்களுக்கான சந்தையை உருவாக்கியுள்ளது. தற்போதைய நிலையில் தேவைக்கு ஏற்ப கொடுக்க முடியாத நிலைதான் உள்ளது. அதே சமயத்தில் இதை நவீனமாக மக்கள் விரும்பும் வகையில் கொடுக்க வேண்டியது அவசியமாக உள்ளது. தொழிலில் எனக்கு உதவியாக மனைவியும் ஈடுபட்டுள்ளார். தவிர நான்கு பேருக்கு இதன் மூலம் வேலைவாய்ப்பையும் உருவாக்கியுள்ளேன். பாரம்பரியமான இந்த தொழிலில் வருமானம் வருவதில்லை என்பதால் குடும்ப தொழிலிலிருந்து பலர் வெளியேறிவிட்டனர். இதை வருமானம் ஈட்டும் தொழிலாக மாற்றினால் புதிய தொழில் முனைவோர்களும் உருவாக முடியும். மத்திய அரசின் குறு சிறு தொழில் பயிற்சி மையத்தின் மூலம், இந்த துறையில் புதிய தொழில் முனைவோர்களை உருவாக்குவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறேன்.

இந்த தொழிலில் உள்ள சிரமம் என்ன வென்றால், மூலப்பொருளான களிமண் தேவைக்கு ஏற்ப கிடைப்பதில்லை. கடந்த மழை நாட்களில் சரியாக திட்டமிடாததால் களிமண்ணை சேகரித்து வைக்க முடியவில்லை. தற்போது ஏரிகளில் தண்ணீர் உள்ளதால் தேவைக்கு ஏற்ப எடுக்கவும் முடியவில்லை. மேலும் மழைக் காலத்தில் உற்பத்தி குறையவும் வாய்ப்புகள் உள்ளன. இது போன்ற சிக்கல்களுக்கு முன்கூட்டியே திட்டமிடவேண்டியது அவசியம்.

கலையை வருமானமாக மாற்றுவது ஒரு மாபெரும் கலை என்பார்கள், அதிலும் களிமண் தயாரிப்புகளை வெகுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்து வருமானம் காண்பதும் பெரும் சவாலான விஷயம். ஒரு தொழில் முனைவோராக இவரது உழைப்பு காலத்தை மீட்டுக் கொண்டு வருகிறது என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

விழித்தவர்கள் வாருங்கள்!..மற்றவர்களையும் விழிப்படைய வழிகாட்டுங்கள்..

Read more

Clay pots retain heat better than any other cookware. Their immense heat-retaining capacity helps food stay hot longer, saving the need to heat and re-heat. Food stays warm for upto 5 to 6 hours. Also, since they retain heat so well, you can safely turn off the stove 5 to 7 minutes earlier than you usually do and rest assured that your food will be cooked the same, and taste better! To really understand the heat retaining capacity of the pot; consider this–clay pots can retain heat so well, so much so that even though the food inside is cooking and boiling, the outside walls of the pot are not hot enough to burn your hands/fingers–thats how much heat it can retain just within the inside walls of the pot.

We can safely say that our pots are 100% green! The clay we use to make our line of cookware is a 100% renewable resource. Our pots made from this pure and natural resource, have no chemicals or additives in their making. At the end of their useful period of time, which can be decades long, they can be returned to the earth in the manner that they were extracted. Clay pots are truly a far cry from the mining, processing and making of cookware with metals. The production and use of clay pots can in no way be compared to the dangerously detrimental effects metal mining and processing has on the environment.

Clay pots cook food with far-infrared heat (FIR). This type of heat is unique to clay cooking and helps carry spices and seasoning much deeper into the food, giving it that extra special touch in flavor. An added advantage is that this feature also helps you reduce the use of salt, and is therefore ideal for low-sodium diets. This superior form of heat also helps in cooking vegetables and meat evenly. Unevenly cooked food will now be a thing of the past with clay pots.

Today there is much talk on the health issues related to environmental toxins (chemical and metal) and one of the significant ways these metal ions can get into our bodies is through the vessels we cook our food in. These seemingly innocent and shiny metal vessels react to food during the cooking process (under high heat) and leach metallic ions into the food. Intake of such metal ions, even in small quantities disrupts the basic metabolic functioning of the body which in turn is one of the causes for various diseases.

Start cooking Food using Earthen Cookware and keep your family Healthy. Foods cooked in earthenware retains 100% nutrients.

Contact 9962807914, 9841757916 for more details and Our Shop Located @ SAI ORGANIC, Lenin Complex, Shop No.3, Bharathi School Street, Velachery Main Road, Selaiyur, Chennai - 73. (Behind Camproad Signal)

Read more -->

Food cooked in clay pots is synonymous with food cooked perfectly, for clay vessels have the unique quality of locking in all the steam and vapor that evaporates during cooking, thereby retaining all the nutrients of the food. The added advantage is that when this locking in of steam and vapor happens, the food gets cooked in its own oils and liquids, this reduces the need to add more oil and/or water.

Many people think that cooking in clay pots is the new fad, but this is far from the truth. In fact, cooking with clay cookware dates back to our earliest and oldest civilizations. Despite the numerous differences with civilizations of the past, the one binding feature seems to have been their practice of cooking food in clay. From the Asians in the East, to the Native Americans in the West, all our ancestors seemed to have shared this common ground. While some may argue that they were probably not advanced enough to use other material, their expert use of metals like copper, bronze and iron, rule out this argument. For all we know, they might have had much more knowledge of the benefits of cooking in clay pots than we do today.

Start cooking Food using Earthen Cookware and keep your family Healthy. Foods cooked in earthenware retains 100% nutrients.

Contact 9962807914, 9841757916 for more details and Our Shop Located @ SAI ORGANIC, Lenin Complex, Shop No.3, Bharathi School Street, Velachery Main Road, Selaiyur, Chennai - 73. (Behind Camproad Signal)

Read more -->

Clay cookware on the other hand is inert by nature and does not react with the food. Our cookware is made from terra-cotta clay – a rich and potent matter that is naturally occurring on the surface of the earth. It is composed of minerals such as calcium, magnesium, phosphorous, potassium, sodium etc, which are essential to our body. And these minerals are bound together so perfectly in nature, that they do not react or leach into the food being cooked in them.

Start cooking Food using Earthen Cookware and keep your family Healthy. Foods cooked in earthenware retains 100% nutrients.

Contact 9962807914, 9841757916 for more details and Our Shop Located @ SAI ORGANIC, Lenin Complex, Shop No.3, Bharathi School Street, Velachery Main Road, Selaiyur, Chennai - 73. (Behind Camproad Signal)

விழித்தவர்கள் வாருங்கள்!..மற்றவர்களையும் விழிப்படைய வழிகாட்டுங்கள்..

Read more -->